பரம குயவனே என்னை வனையுமே

 

 

     பரம குயவனே என்னை வனையுமே

     உம் சித்தம் போல் என்னை வனையுமே (2)

     உமக்காக என்னை வனையுமே

     களிமண்ணான என்னை வனைந்திடுமே (2)

 

உம்கரத்தாலே மண்ணை பிசைந்து

மனிதனை உருவாக்கினீர்

எந்தனையும் தொட்டு -உம்

சாயலாக வனையும்

உம்மைப்போல மாற்றிடுமேஎன்னை (2)

 

உமக்குகந்ததாய் உடைத்து என்னை

உம்முடைமை ஆக்கிடுமே

விருப்பம்போல என்னை

திருத்தும் உந்தன் கரத்தால்

அருமையாக வனைந்திடுமே - உமக்கு

 

உமது சித்தத்தின் மையத்திலென்னை

வைத்து என்றும் வழிநடத்திடும்

உந்தன் சித்தம் செய்ய

என்னை தத்தம் செய்தேன்                  

முழுமையாக அர்ப்பணம் செய்தேன்-என்னை